அடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்!

bahavana 1

பிரபல நடிகை பாவனா, அடையாளம் தெரியாத நபர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். கேரளா அங்கமாலி அருகே, அவர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவரது காருக்குள் புகுந்த அந்த நபர்கள், பலரிவட்டம் என்ற ஊருக்குச் செல்லும் வரை அவரிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார்கள். பிறகு, காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்கள். இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநரைக் கைது செய்துள்ளது போலீஸ். 'தீபாவளி', 'அசல்' போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. 

-பரிசல்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!