உத்தர பிரதேசத்தில் 3-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்!

UP Polls

இன்று உத்தர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 403 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. 12 மாவட்டங்களில் நடக்கும் இந்த தேர்தலில், மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கான்பூர், உத்தர பிரதேச தலைநகரமான லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் இன்றுதான் தேர்தல் நடக்கிறது. கிட்டத்தட்ட 2.41 கோடி பேர் இன்று நடக்கும் மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். கடந்த முறை இந்த 12 மாவட்டங்களில் நடந்த தேர்தலில், வாக்குப் பதிவு 59.96 சதவிகிதமாக இருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!