கார்த்தி சிதம்பரம் மீது சு.சுவாமி சரமாரி குற்றச்சாட்டு

Subramanian Swamy

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 'கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் பற்றி வருமான வரித்துறையிடம் சரியான தகவல்கள் கொடுக்கவில்லை. ஆனால், இதுகுறித்து வருமான வரித்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், ப.சிதம்பரத்துக்கு நிதி அமைச்சகத்துக்குள் இருக்கும் நண்பர்கள்தான்.

சட்டத்துக்குப் புறம்பாக மலேசிய மேக்சிஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பயனடைந்துள்ளார். வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருக்கும் வங்கிகளில் நடந்த பரிவர்த்தனைகளை ப.சிதம்பரம் மறைத்துள்ளார். 'தேர்தல் ஆணையமும், சி.பி.ஐ.யும் சிதம்பரத்துக்கு எதிராகவும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!