மகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற அவலம்

karnataka man carries his daughter deadbody

கர்நாடகாவில் தும்கூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி, ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் தன் மகளின் சடலத்தை  இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

திம்மப்பா என்பவரின் 20 வயது மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு கோடிஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பலனின்றி இறந்த அப்பெண்ணின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டது. இதனால் செய்வதறியாத திம்மப்பா,  தெரிந்தவர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தன் மகளின் சடலத்தைக் கொண்டு சென்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!