சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு! | permission for women entry into Sabarimala Temple case postponed

வெளியிடப்பட்ட நேரம்: 01:11 (21/02/2017)

கடைசி தொடர்பு:08:58 (21/02/2017)

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு, திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி சில மதரீதியான நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால், இந்த வழக்கில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சாசன அமர்வு தேவைப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் தற்காலிமாக ஒத்திவைத்துள்ளது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க