28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்! | Bank employees protest on Feb 28

வெளியிடப்பட்ட நேரம்: 01:11 (21/02/2017)

கடைசி தொடர்பு:08:53 (21/02/2017)

28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்!

வங்கிகள் சீர்திருத்த நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் மக்கள் விரோத வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்தும், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும், வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாத மோசடிப் பேர்வழிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தலைமையில், வரும் 28-ம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க