வெளியிடப்பட்ட நேரம்: 06:23 (21/02/2017)

கடைசி தொடர்பு:08:27 (21/02/2017)

குப்பைக்குச் செல்லும் ஐ.என்.எஸ் விக்ராந்த்?

இந்தியக் கப்பற் படையின் பழமையான விமானம்தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த், தற்போது மிகவும் மோசமாகி, குப்பைக்குச் செல்லும் நிலையில் இருப்பதாக கப்பற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30 வருடங்களாக இந்தியக் கப்பற்படையில் முக்கியப் பங்காற்றி வந்த இந்தக் கப்பலின் பயன்பாடு, வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி அன்று நிறுத்தப்பட இருக்கிறது. இதையடுத்து, அந்தக் கப்பலை அப்படியே மியூசியமாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கப்பலை மியூசியமாக மாற்ற 1000 கோடி செலவு ஆகும் என்பதாலும், அதில் பாதித் தொகையை ஏற்குமாறு கூறிய ஆந்திராவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும் தற்போது அந்தக் கப்பல் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. இந்தக் கப்பல் 1987 -ம் ஆண்டில் இருந்து நமது கப்பற்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க