மகாராஷ்ட்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்...

Mohan Bhagavat

photo courtesy - ANI

இன்று, மும்பை உட்பட 10 மாநகராட்சிகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக-வும், சிவ சேனா கட்சியும் தனித்துநின்று இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து, இந்த இரு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

BMC Polls

photo courtesy - ANI

10 மாநகராட்சிகளிலும் மொத்தம் உள்ள 1,268 இடங்களுக்கு 9,208 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 43,160 வாக்குச்சாவடிகள் இந்த தேர்தலுக்ககாக அமைக்கப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சிக்கு மட்டும், மொத்தம் இருக்கும் 227 இடங்களுக்கு 2,275 பேர் போட்டியிடுகின்றனர். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், டினா அம்பானி உள்ளிட்டோர் காலையிலேயே வந்து, அவர்களின் வாக்குகளைப் பதிவுசெய்தனர். காலை 7:30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், வரிசையில் நின்று மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!