வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (21/02/2017)

கடைசி தொடர்பு:09:59 (21/02/2017)

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல்: மேலும் ஒருவர் கைது

நடிகை பாவனாவைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல்செய்த வழக்கில், நான்காவதாக மணிகண்டன் என்பவரை பாலக்காட்டில் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், 4-வதாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸ் தேடிவருகிறது.  

சில நாட்களுக்கு முன், நடிகை பாவனாவை அவரது முன்னாள் கார் டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள், ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் புகார் அளித்ததன்பேரில், இதுவரை 4 பேரை காவல்துறை கைதுசெய்துள்ளது.  இரண்டு  நாட்களுக்கு முன், மலையாள நடிகர்கள் அனைவரும் சேர்ந்து பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..

நீங்க எப்படி பீல் பண்றீங்க