வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (21/02/2017)

கடைசி தொடர்பு:14:45 (21/02/2017)

'ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றி ஆதாரங்கள் திரட்டுகிறோம்' - விடாது 'பீட்டா'

Poorva Joshipura

பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் 'மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாக' தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்த நிலையில், இந்தாண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டங்களால் சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு,  ஜல்லிக்கட்டு போட்டி தமிழகமெங்கும் நடந்தது. 

தற்போது பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, 'இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகமாக மிருகவதை நடந்தது. மிருகவதை பற்றிய ஆதாரங்களைத் திரட்டி, சீக்கிரமே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க