சிசேரியனில் தமிழகம் இரண்டாவது இடம்! மத்திய அரசிடம் புகார்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, சிசேரியன்மூலம் குழந்தைகள் பிறப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் இதனைத் தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சுபர்ணா கோஷ் என்பவர், இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியைச் சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், உலக நாடுகளில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரைதான் சிசேரியன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் ஆய்வறிக்கையின்படி சிசேரியன்மூலம் குழந்தைகள் பிறப்பதில் தெலுங்கானா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு, 58 சதவிகிதம் சிசேரியன் நடைபெறுகிறது. 34.1 சதவிகிதத்தில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில், கடந்த 2005-06-ம் ஆண்டில் 20.3 சதவிகிதமாக இருந்தது. 2015-16-ம் ஆண்டில் அது 34.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் சிசேரியன் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்.

மருத்துவமனைகள், பணத்துக்காக சிசேரியன் முறையைக் கையாள்கின்றன. சிசேரியன் செய்யும் மருத்துவர் பெயரையும் மருத்துவமனைகள் வெளியிட வேண்டும். எவ்வளவு சிசேரியன் நடந்தது என்ற தகவலையும்  மருத்துவமனைகள் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!