வெளியிடப்பட்ட நேரம்: 02:14 (23/02/2017)

கடைசி தொடர்பு:09:30 (23/02/2017)

கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

கச்சா எண்ணெய்யின் விலை 51 டாலருக்கும் கீழ் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளில், பாறைகளில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் எனப்படும் பாறை எரிவாயுமூலம் பெறப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக, கச்சா எண்ணெய்யின் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், ப்ரெண்ட் கச்சா, நைமெக்ஸ் கச்சா போன்றவற்றின் விலைப் புள்ளி சதவிகிதம் 1.33 வரை குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய்யின் விலை, பேரல் ஒன்றுக்கு 55 டாலர்களில் இருந்து 51 டாலருக்குக் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் குறையும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க