வெளியிடப்பட்ட நேரம்: 05:57 (23/02/2017)

கடைசி தொடர்பு:08:30 (23/02/2017)

உ.பி-யில் நாங்கதான் ஆளுங்கட்சி - வெங்கையா நாயுடு

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க, பகுஜன்சமாஜ் கட்சிகளும் ஆளும் சமாஜ்வாடி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'உ.பி தேர்தலில் ஆளுங்கட்சியாக பா.ஜ. கட்சிதான் இருக்கப்போகிறது. எதிர்கட்சி அந்தஸ்தை யார் பெறப்போகிறார்கள் என்ற  போட்டியில்தான் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உள்ளன. எதிர்க்கட்சியை மக்கள் முடிவுசெய்வார்கள்' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க