ஜூன் 18-ல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

ஜூன் 18-ம் தேதி, சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்தியக் குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்பட 24 வகையான பதவிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலை, முதன்மை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதனால், தகுதியான நபர்கள் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகின்றனர். இந்தத் தேர்வுகளை யூ.பி.எஸ்.சி. நடத்துகிறது. கடந்த 2013-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே மாதம் நடைபெற்றது. ஆனால், 2016 வரையிலான கடந்த 3 ஆண்டுகளில், சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதமே நடக்கும் என்று யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!