வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (24/02/2017)

கடைசி தொடர்பு:08:16 (24/02/2017)

சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல்குறித்தும், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற அமளி மற்றும் தி.மு.க-வினர் தாக்கப்பட்டது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பேச்சு வார்த்தையில், பல்வேறு அரசியல் சூழல்குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், தமிழக அரசியலில் அடுத்த நிலைப்பாடு குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க