இந்தியா இஸ்ரேலுடன் ரூ.17 ஆயிரம் கோடியில் ஏவுகணை ஒப்பந்தம்!

ந்த ஆண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு செல்லவுள்ளார். அதற்கு முன்னதாக இரு நாட்டு இடையே மிகப்பெரிய ஏவுகனை ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் 17ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய ராணுவத்துக்கு தரையில் இருந்து வான் இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணைகள், கடற்படைக்கு நீண்டதூர ஏவுகனைகள் தயாரிக்கப்படும். மொத்தம் 200 ஏவுகனைகள் மற்றும் 40 தாக்கும் அலகுகள் தயாரிக்க இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைப் பெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்லது. இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் ஏபடுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!