நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் கேள்வி | NEET issue: SC asks question to MCI, CBSE

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (27/02/2017)

கடைசி தொடர்பு:18:02 (27/02/2017)

நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் கேள்வி

நீட் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 25 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன் என்று இந்திய மருத்துவ கவுன்சில், சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அப்போது, பதிலளித்த இந்திய மருத்துவ கவுன்சில், தேர்வு எழுதுவது தொடர்பாக நீட் சட்டத்தில் விதிமுறைகள் ஏதும் விதிக்கவில்லை. வயது தொடர்பாக சிபிஎஸ்இ தான் விதிமுறைகளை விதித்துள்ளது எனக் கூறியது.

Supereme court

இதையடுத்து, வயது விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கொடுக்காவிடில், அந்த விதிமுறை நீக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதையடுத்து வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க