வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (27/02/2017)

கடைசி தொடர்பு:09:14 (28/02/2017)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி

palanisamy

 டெல்லியில் இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழகப் பிரச்னையைப் பற்றி பேசியுள்ளார். அதற்குப்பின், செய்தியாளர்கள் மத்தியில் எடப்படி பழனிசாமி பேசினார். 

அப்போது அவர், 'ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசின் ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள 17,333 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கவும் வர்தா புயலுக்கான 27,000 கோடி ரூபாய் நிதியை விரைந்து வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளேன். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கேட்டுள்ளேன். அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கான நிதியை விரைவில் வழங்குமாறு கூறியுள்ளேன். காவிரி நதிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க, காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் என்பதைப் பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.

தேனியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மீனவர்கள் சிறப்புத் திட்டத்துக்கு 1,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்துக்கு, கூடுதலாக 85,000 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்றும் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.' என்று தெரிவித்தார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க