கொல்கத்தா மார்க்கெட்டில் தீ விபத்து! | Fire accident in Kolkata market

வெளியிடப்பட்ட நேரம்: 09:12 (28/02/2017)

கடைசி தொடர்பு:12:22 (28/02/2017)

கொல்கத்தா மார்க்கெட்டில் தீ விபத்து!

Kolakatta

PC: ANI

கொல்கத்தாவில் இருக்கும் மிகப்பெரிய மொத்த விலை மார்க்கெட் புர்ராபசாரில், நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு மிக நெருக்கத்தில் வசிக்கும் மக்கள், தீ வேகமாகப் பரவியதையடுத்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.

கிட்டத்தட்ட 30 தீயணைப்பு வண்டிகள்மூலம் விடிய விடிய தீயணைப்புப் பணி நடைபெற்றது. தற்போது, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லாத நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க