வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (28/02/2017)

கடைசி தொடர்பு:13:29 (28/02/2017)

குர்மெஹருக்கு பாலியல் மிரட்டல்: டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு

டெல்லி பல்கலைக்கழக மாணவியும், மறைந்த கார்கில் போர் வீரர், கேப்டன் மன்தீப் சிங்கின் மகளுமான குர்மெஹர் கவுர், பாஜக-வின் மாணவர் அமைப்புக்கு (Akhil Bhartiya Vidhyarthi Parishad ) எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தது வைரலானது.

Gurmehar Kaur
 

இந்நிலையில், குர்மெஹருக்கு, பாஜக-வினர்  பாலியல் மிரட்டல்கள் விடுப்பதாக, அவர் டெல்லி மகளிர் ஆணயத்தில் புகார் அளித்தார். குர்மெஹருக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவர்களுக்கு, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். தற்போது, டெல்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்து பாலியல் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த விசாரணையைத் தொடங்கி உள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க