வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (02/03/2017)

கடைசி தொடர்பு:20:42 (02/03/2017)

20 நிமிடத்தில் சென்னை டூ பெங்களூரு: ஹைப்பர்லூப் மேஜிக்

வெற்றிடம் கொண்ட குழாய்களில் கேப்சூல் மூலம் இயங்கும் ஹைப்பர்லூப் போக்குவரத்தை, இந்தியாவில் கொண்டுவரும் பணிகளில் ஹைப்பர் லூப் ஒன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப் நிறுவனத்தினர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், 'இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்தில், 20 நிமிடத்தில் சென்னை டூ பெங்களூரு பயணம் சென்று விடலாம். அதேபோல் 50 நிமிடத்தில் சென்னை டூ மும்பை (பெங்களூரு வழியாக) செல்லலாம். சென்னை டூ திருவனந்தபுரம் 40 நிமிடத்தில் சாத்தியம்' என்கிறது ஹைப்பர் ஒன் நிறுவனம். 

Hyperloop

குறிப்பாக, 1,317 கி.மீ தொலைவுடைய டெல்லி டூ மும்பை 55 நிமிடத்தில் சென்று விடலாம் என்று ஹைப்பர்லூப் ஒன் கூறியுள்ளது. தற்போது, ஹைப்பர்லூப் போக்குவரத்து, மாதிரி வடிவில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க