சகிப்புத்தன்மை அற்றவர்களுக்கு இங்கே இடமில்லை - குடியரசுத் தலைவர் காட்டம்!

பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, சகிப்புத்தன்மை குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மாற்றுக் கருத்துள்ளவர்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சியினர் கடுமையாகத் தாக்குவதாகவும், தேச விரோதிகள் என முத்திரை குத்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் குவிந்துவருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க-வுக்கு நெருக்கமான  ஏ.பி.வி.பி அமைப்பினர், கல்லூரி மாணவர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்கள். இதனால், கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவருகிறது. குர்மெஹர் கவுர் என்ற மாணவி இந்த அமைப்பை எதிர்த்ததால், பாலியல் மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது, ஏ.பி.வி.பி. நாடு முழுவதும்  இதற்குக் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், நேற்று மௌனம் கலைத்திருக்கிறார் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

கேரளாவில் நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, " பல்கலைக்கழகங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் தேவை. சுதந்திரமான சிந்தனைகளும், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் நமது நாளந்தாவும், தட்சசீலமும் பெயர் பெற்றவை. கல்லூரிகளில்  நல்ல விவாதங்கள் அவசியம் தேவை. ஆனால், இப்போது சில  இடங்களில் நடக்கும் சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது. சகிப்புத்தன்மை என்பது இங்கே மிகவும் அவசியமான ஒன்று. சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை" எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!