வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (03/03/2017)

கடைசி தொடர்பு:14:00 (03/03/2017)

விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை முறைபடுத்தக்கோரி தனியார் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும் என்ற நீதிபதி, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க இழப்பீடு மட்டும் தீர்வாகாது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 2 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க