மணிப்பூர் - பா.ஜ.க மீது வழக்குப் பதிவுசெய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

மணிப்பூர் மாநிலத்தில், இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 8-ம் தேதி 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடக்கும் முதற்கட்டத் தேர்தலில், சமூகப் போராளியான இரோம் ஷர்மிளா மற்றும் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்துள்ள ஓக்ராம் ஐபாபி சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடக்கம்.

சான்றிதழ் குழுவின் அனுமதி பெறாமல் விளம்பரம் வெளியிட்டதாக, மணிப்பூர் மாநில பா.ஜ.க மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து, தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!