மணிப்பூரில் இன்று நடந்து வரும் தேர்தலின்போது, அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Earthquake

மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மணிப்பூர் சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள சண்டல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது, 3.5 அளவாகப் பதிவானது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்,  இந்தியா-மியான்மர் எல்லையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 ஆகப் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த நிலநடுக்கத்தால், மணிப்பூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!