வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (04/03/2017)

கடைசி தொடர்பு:11:23 (04/03/2017)

மழை நீரில் அதிகரிக்கும் அமிலத்தன்மை!

இந்தியாவில், சுற்றுப்புற மாசு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கொடைக்கானல், நாக்பூர், விசாகப்பட்டினம், அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சோதனை செய்யப்பட்டது. இதில், பி.எச் அளவு 4.77 முதல் 5.32 வரை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மழைநீரின் பி.எச் அளவு 5.56-க்குக் கீழ் குறைந்தால், அது அமிலத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மழை நீரில் அமிலத்தன்மை அதிகரிப்பதால், விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, நினைவுச் சின்னங்கள் உள்பட பழம்பெருமை வாய்ந்த கட்டடங்கள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நீரைக் குடிப்பதால், மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க