சாதாரணர்களின் சாதனைக் கண்டுபிடிப்புகள்... இவர்களை நாம் தெரிந்துகொள்வோமா?! | Unsung heroes and their useful and remarkable inventions

வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (04/03/2017)

கடைசி தொடர்பு:19:49 (04/03/2017)

சாதாரணர்களின் சாதனைக் கண்டுபிடிப்புகள்... இவர்களை நாம் தெரிந்துகொள்வோமா?!

நமது இந்திய நாட்டில் பல்வேறு திறமைசாலிகளும் அறிவியலாளர்களும் நிறைந்துள்ளனர். இவர்களுள் கண்ணுக்குத் தென்படுபவர்கள் சிலரே.  சில்லறைகள் என்றும் சத்தம் போடும்;அதனினும் உயர்ந்த ரூபாய் நோட்டுகள் இடம் தெரியாது இருக்கும்.சில்லறைப் போல் இரைச்சல் எழுப்புவர்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை;அவர்களே தங்களை விமர்சித்துக்கொள்வார்கள்.ஆனால் ரூபாய் நோட்டுகள் போல இருந்து பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்ற சிலர் நம் கண்களுக்குத் தென்படுவதில்லை.அப்படிப்பட்ட சிலரில் இவர்களும் உண்டு…

அஜய்டிராக் ரூ:

ajay சாதனை

போக்குவரத்து நெரிசலால் இன்றைய உலகில் நாம் எங்கு சென்றாலும் கண்களில் படுவதும் காதுகளில் கேட்பதும் Ambulance-ன் உருவமும் சைரனும் தான்.அதனை மோட்டார் சைக்கில் ஊடாக உருவாக்கியவர் தான் அஜய். இவரது பிறப்பிடம் சட்டிஸ்கார்.அங்குள்ள நாராயனபூர் மாவட்டத்தில் தான் இதனை நடைமுறைப் படுத்தினார்.அதற்கான காரணம் என்னவென்றால்,பெரும்பான்மையான மக்கள் உடலின் திடீர் பாதிப்பால் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்குச் செல்ல இயலாமல் மாய்ந்து போவதைக் கண்டு மனம் வெதும்பி போனார். இவரது இந்த மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் முயற்சி இதுவரை 200-க்கும் மேற்பட்ட பிரசவ கால பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளதாம்.

இப்போழுது உங்களுக்கு என்ன தோன்றுமென்று எனக்குப் புரிகிறது.ஏன் 108 இருக்குள்ள என்பது தானே.பாவம்ங்க அது.கரடு முரடான பாதைகளில் செல்லத் தயங்குமாம்.

எனவே இந்த மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சைக் கண்டறிந்த அஜய்கு Hats off!!!

முகமது ரயீஸ் மார்கோனி:

Raees Markani சாதனை

இவர் மத்திய பிரதேசத்தைச் சார்ந்தவர். தண்ணீர்க் கலவையாலும் அசிட்டிலின் வாயுவாலும் இயங்கக்கூடிய சொகுசு காரை உருவாக்கியவர். இவர் ஒன்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரோ,மெக்கானிக்கல் எக்ஸ்பர்டோ கிடையாதுங்க. எழுத படிக்க பள்ளிக்கூடம் போனது கூட இல்லையாம். என்னே இவரது அறிவு!!! 

வினோத் தாம்:

vinoth dham

Pentium chips-ன் தந்தை தான் இந்த வினோத் தாம் என்பவர்.டெல்லியில் உள்ள தேர்ந்த கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இன்டெல் ஃபிளாஷ் டிரைவ்ஸ்-ன் கோ-இன்வென்டர். ஆனால் ஐ.டி துறையில் அல்லாதவர் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதே சந்தேகம் தான் பிற நாட்டவர்க்கும்.பின்னர் இவர் படைத்த செமிகன்டெக்டர் டொமெய்ன் மிகவும் போற்றத்தக்கதாக அமையப்பெற்றது.

கிருஷ்ணா பாரத்:

krishna bharath

2001-ம் ஆண்டு செப்.11 அன்று உலக வியாபார வர்க்கத்தில் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.அதற்கான காரணங்கள் எவையென பலரும் குழம்பிக் கிடக்க, கூகுளின் செய்திகளால் இழந்த அந்த நுணுக்கங்களைக் கண்டறிந்தாராம். பின்னர் பெங்களூருவில் கூகுள் ஆய்வகத்தையும் முன்னேற்ற நிலையத்தையும் நிறுவ, ஹில்டாப் அல்காரிதத்தால் இவரது முயற்சிகள் வெற்றி கண்டன.லிங்கா ரஜினி கபாலியால் வெற்றியடைந்தது போல இவரது உழைப்புகளால் உலக வியாபார வர்க்கம் உயர்நிலையை எய்தியது.

அஷ்வத்:

ashwath

கதார் நாட்டைச் சேர்ந்த இவர் என்.ஆர்.ஐ. தொழிலதிபர்.மக்காத குப்பைகளில் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்க வந்தவர்.ஈகோ-ஃபிரெண்ட்லி முறையிலான பைகளை அறிமுகப்படுத்தினார்.அதனை கர்நாடக மாசுபாடொழிப்பு நிறுவனம்,ப்ளாஸ்டிக் பொறியியல் மைய நிறுவனம் ஆகியவை இவரது முறையைப் பரிசோதிக்க பச்சை விளக்கே பிராசித்தது.இது பற்றி அவர் கூறுகையில்,இந்தியாவில் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் பிளாஸ்டிக்-கள் உற்பத்தியாகின்றது.இதனால் பெருமளவில் பாதிப்பு அடைவன மாடுகளே. இதனால் உருவாக்கிய என்விக்ரீன் பைகள் பருத்தியாலும்,காய்கறிகளாலும் 100% உயிரி வகைகளாலும் வந்தவை.இவை நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்றவை.இதனால் அவர்களும் லாபம் அடைகின்றனர் என்றார்.

அருணாச்சலம் முருகானந்தம்:

அருணாச்சலம் முருகானந்தம்:

கோயம்புத்தூர் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது கண்டுபிடிப்பு என்னவென்று கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்.  பெண்களுக்குப் பயன்படுகின்ற சுகாதாரத் துண்டுகளை(Sanitary napkins) உருவாக்கும் ஒரு கருவியை உருவாக்கியவர். உடனே யாரும் MNC நிறுவனங்களுக்கு சென்றுவிட வேண்டாம் நண்பர்களே. மலிவு விலையிலான சுகாதாரத் துண்டுகளை உற்பத்தி செய்கின்ற கருவியை உருவாக்கியவர். தன்னுடைய மனைவி உட்பட பல கிராமத்துப் பெண்களும் தங்களது மாதவிடாய்க் காலங்களில் சுகாதாரமற்ற பொருள்களை உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு மனம் இழந்து போனாராம். இதற்கான தீர்வை நாமே உருவாக்கினால் தான் என்ன என்று எண்ணிணார். இந்த முயற்சியில் ஈடுபட்ட இவர் தனது மனைவி சகோதரிகளிடம் இது பற்றிக் கூறுகையில் அவர்கள் இவர் அநாகரிகமாக செயல்படுவதாக எண்ணி முற்றும் ஒதுக்கித் தள்ளினர். பின்னர் இவர் தமது ஊரின்கண் அமைந்த கல்லூரிப் பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்றார்.அவர்களும் ஓர் ஆணிடம் இது பற்றி கலந்தாலோசிப்பதில் தயக்கம் கொண்டனர்.

மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு இதனை மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் ஏற்றுக்கொண்டது.இவரை பைத்தியம் என எண்ணி ஒதுக்கி வைத்த ஊர்மக்கள் முன் இவர் உலகின் தலைசிறந்த 100 தொழிலதிபர்களுள் ஒருவராக விளங்குகின்றார். சென்ற ஆண்டு பத்மஸ்ரீ விருது தந்து இந்திய அரசும் கெளரவித்தது.

இது போன்ற அதிகம் தெரியாத சாதனையாளர்களை கொஞ்சம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தலாமே!!!

 

-பா.பிரியதர்ஷினி

(மாணவப் பத்திரிகையாளர்)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close