வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (05/03/2017)

கடைசி தொடர்பு:13:06 (05/03/2017)

காஷ்மீரில் துப்பாக்கி சூடு - ஒரு காவலர் பலி

தெற்கு காஷ்மீரின் டிரல் சிகார்ஹா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காவலர் ஒருவர் பலியானார். மேலும் 3 பாதுகாப்பு படை வீரர்களும் காயமடைந்துள்ளனர். இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் சிகார்ஹாவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சனிக்கிழமை மாலையில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் புகுந்தனர்.

அவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சப்ஷார் பட் மற்றும் முஜாஹித் என கண்டறியப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டத்தில் ஒருவர் பாகிஸ்தானி என்றும் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையும் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் எஸ்.பி.வைத் தெரிவித்தார். இந்தச் துப்பாக்கி சூட்டின் போது மன்சூர் அஹமது என்ற காவலர் ஒருவரும் உயிரிழந்தார்.

மேலும் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக, சிகார்ஹா பகுதியில் 144 தடையை பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மொபைல் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க