கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்மீது தாக்குதல் | RSS workers were brutally attacked by mob in Kozhikode

வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (05/03/2017)

கடைசி தொடர்பு:13:49 (05/03/2017)

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்மீது தாக்குதல்

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை, நேற்று இரவில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

கேரளாவில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை 10 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட மூன்று பேரும் 20 - 29 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த வழக்கு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களை தேடி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close