" உ.பி தேர்தலில் எளிதான வெற்றி கிடைக்கும்" - ராஜ்நாத் சிங்.

உத்தரப்பிரதேசத் தேர்தலின் வாக்குகள் மார்ச்  11-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலில் எந்தவித கடினமும் இல்லாமல், பிஜேபி-க்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு இருக்கிறது. இந்திய தேசத்தின் பெரும்பான்மையான மக்கள், இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், மக்களிடம் செல்வாக்கை முற்றிலுமாக இழந்துள்ளது. இனி, காங்கிரஸ் கட்சி எங்களுக்கான போட்டியாக இருக்க முடியாது. பிஜேபி-யின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!