முதன்முறையாக இந்தியாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்!

MWC

உலகில், பார்சிலோனா மற்றும் ஷாங்காய் என இரண்டே இடங்களில்தான் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நடக்கிறது. இந்த விழாவில், உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்துகொண்டு, புதுவித போன்கள் மற்றும் போன்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்துவர். 

இந்தியா, மொபைல் சந்தையில் தொடர்ந்து வளர்ந்து வருவதால், வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி,  'இந்தியன் மொபைல் காங்கிரஸ்' டெல்லியில் நடைபெற உள்ளது. இதை, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) தெரிவித்துள்ளது. 

'இந்த விழாவை நடத்துவதற்கு இந்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் முனைப்புக்காட்டிவருகிறது. அதற்கான, ஏற்பாடுகளை COAI செய்யும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'இந்த விழாவில், ஃபேஸ்புக், ஹூவேய், எரிக்ஸன், சிஸ்கோ போன்ற முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும், இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களையும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த ஆண்டு நடைபெறும் மொபைல் காங்கிரஸில், டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என்று COAI தெரிவிக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!