பணமதிப்பிழப்பு விவகாரம்- மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Supreme Court

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டை வங்கிகளில் கொடுத்து அதற்கு இணையான புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியது. இதற்கு டிசம்பர் 31 வரை மத்திய அரசு அவகாசம் கொடுத்தது. அதற்குப் பின்னர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளை அணுகலாம் என்று கூறப்பட்டது. 

ஆனால், டிசம்பர் 31-க்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மாற்றுவதற்கும் சிரமங்கள் நீடித்து வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 'பிரதமர் உரையிலும் அதற்குப் பிறகு வந்த அறிவிப்பிலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியாதவர்கள் ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது' என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,  தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!