வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (07/03/2017)

கடைசி தொடர்பு:15:49 (07/03/2017)

உலக சாதனை படைத்தார் வைக்கம் விஜயலட்சுமி!

கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், மலையாளத்தில் வெளியான 'செல்லுலாய்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் பாடலிலே மாநில அரசின்  விருதுபெற்ற விஜயலட்சுமி, அடுத்து வந்த 'நாயகன்' படத்திலும் விருது பெற்றார்.

தமிழில் இடம்பொருள் ஏவல், விழித்திரு உள்ளிட்ட பல படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர், காயத்ரி வீணை என்ற ஒற்றை கம்பி மட்டுமே கொண்ட அபூர்வ வீணை வைத்துள்ளார். இந்த வீணையை வாசிக்கத் தெரிந்தவர்களும், வீணை வைத்திருப்பவர்களும்  மிகவும் குறைவு.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் எர்ணாகுளத்தில் நடந்த கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து காயத்ரி வீணையில் 5 மணி நேரம் 67 பாடல்கள் வாசித்து உலக சாதனைப் படைத்தார் விஜயலட்சுமி.

செய்தி, படம்: வீ.சக்தி அருணகிரி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க