டெல்லி பல்கலை பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை | GN Saibaba sentenced to life in jail by Gadchiroli Sessions Court

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (07/03/2017)

கடைசி தொடர்பு:17:41 (07/03/2017)

டெல்லி பல்கலை பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

DU professor GN Saibaba

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சாய்பாபா உள்பட் ஆறு பேரை கட்சிரோலி காவல்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டிக்கப்பட்டனர். சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கும் சாய்பாபா, பழங்குடியினர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறலுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க