அனாதை இல்லத்தில் சிறுமிகளுக்கு வன்கொடுமை

கேரளாவில் அனாதை இல்லம் ஒன்றில், ஏழு சிறுமிகள் சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆறு பேரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சிறுமி ஒருவர், வெளியே வந்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தப்பிறகு, இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சிறுமிகள் அனைவரும் 14-15 வயது உடையவர்கள் ஆவார்கள். கேரளாவில், சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, பாதிரியார் ஒருவர் கடந்த சில வாரத்துக்கு முன் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அங்கு அடுத்த அதிர்ச்சி வெளியாகி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!