'ஜாகீர் நாயக் நேரில் ஆஜராக உத்தரவு!'

ஜாகிர் நாயக், மார்ச் 14- ம் தேதி விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அறிக்கை அனுப்பியுள்ளது. இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் என்ற அறக்கட்டளையை நடத்திவந்தார்.

 அவ,ர் அந்த அறக்கட்டளையின்மூலம் இளைஞர்களிடம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறார்; அவரது அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறது என்று தேசியப் புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியது. கடந்த டிசம்பர் மாதம் அவரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்தியது. அவரது தொண்டு நிறுவனத்தைத் தடைசெய்தது. பணமோசடி தொடர்பாக, ஜாகீரின் சகோதரி நயிலா நூராணியிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

நூராணியின் வங்கிக் கணக்கில் செய்யப்பட்ட பணப் பரிமாற்றம் தொடர்பாகவும்,  அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தேசியப் புலனாய்வு அமைப்பு, மார்ச் 14-ம் தேதி, ஜாகிர் நாயக் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிக்கை அனுப்பியுள்ளது. கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக ஜாகீர், சவூதி அரேபியாவில் இருப்பதாகத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!