ட்விட்டரில் கிண்டல்... போலீஸுக்கு அடித்தது ஜாக்பாட்!

மகாராஷ்டிர மாநிலத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றுபவர், ஜோகாவாட். 180 கிலோ எடையுடன் உடல் பருமனாக இருக்கும் இவரின் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், பிரபல எழுத்தாளர் ஷோபா டே.  மும்பையில் உள்ள போலீஸார், உள்ளூர் தேர்தல்களுக்காக பலமான பாதுகாப்புக்குத் திட்டமிட்டுள்ளனர் என்று கிண்டல் செய்யும் விதமாக தனது கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவந்தது. மேலும், எதிர்பாராத விளைவாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, உடல் பருமனைக் குறைக்கும் அறுவைசிகிச்சையை அந்த போலீஸ்காரருக்கு அளிக்க முன்வந்தது. அறுவை சிகிச்சை முடிந்து, கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவமனையைவிட்டு வெளியேறிய போலீஸ் ஆய்வாளர், தன்னைப் பிரபலப்படுத்திய எழுத்தாளருக்குத் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஜோகாவாட் நலமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் சுமார் 80 கிலோ எடையை அவரால் இழக்க முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!