ஏன் அபராதம்? எஸ்பிஐ சொல்லும் காரணம் இதுதான்!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிடில், அபராதம் விதிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெருநகரங்களில் ரூ.5,000 மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்பிஐ கூறியுள்ளது.  

Arundathi Battachariya

இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், '10 கோடி ஜன்தன் கணக்குகளைப் பராமரிக்க பெரும் செலவாகிறது.

எனவேதான், செலவை ஈடுகட்ட குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்காத கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!