சுப்பிரமணியன் சுவாமியின் நிகழ்ச்சியைத் திடீரென ரத்துசெய்த கல்லூரி!

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சியை, டெல்லி கலை மற்றும் வணிகவியல் கல்லூரி திடீரென ரத்துசெய்துள்ளது.

Subramanian Swamy

டெல்லி, கலை மற்றும் வணிகவியல் கல்லூரியில், இதழியில் துறையின் நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி நாளை கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை, நடத்துவதற்கான சூழல் இல்லாததால், நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர்கள், கடந்த வாரம் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தன. 

இதற்கிடையே. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சுவாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், மாணவர்கள்தான் அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கல்லூரி முதல்வர் ராஜீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதேபோல கடந்த வாரம் ஸ்வராஜ் கட்சியின் யோகேந்திர யாதவின் நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!