Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"கச்சத்தீவு இலங்கைக்கு இல்லை!'' - இதுதான் தமிழகத்தின் குரல் #VikatanSurveyResult

இலங்கை கடற்படையின் தாக்குதலில் பலியாகும் மீனவர்கள்

மிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் மீண்டும் அரங்கேறத்  தொடங்கியுள்ளன. இலங்கை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்பவர் பலியானார். இது தொடர்பாக நேற்று (09/03/2017)கட்சத்தீவு குறித்து  "மத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...?" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் தமிழக அரசு மீனவர்கள் விஷயத்தில் அதிரடியான திட்டத்தை தொடங்கி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கருத்து அதிகமாக இருந்தது. மேலும், இந்த சர்வேயில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் சொன்ன பதில்களும் கீழே...

மீனவர்கள் பிரச்னை தீர உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

*Indian Navy force will support the tamilnadu fisherman by using latest technologies  This may help to avoid them to cross the borders 

*தனிஈழம் தான் ஒரே தீர்வு

*தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி தரவேண்டும் 

*Almost all the politicians do politics with the fisherman issues  but they don t want to bring a permanent solution fearing that they can t do politics in future 

*தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கு தான் பிரச்சனை நாம் இலங்கை கடற்படையுடன் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் தேவையில்லாமல் ஏன் நாம் இலங்கை மீனவர்கள் உடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் 

*When Tamilan take charge of central government that time only this issue will be resolved 

*இந்திய கடற்படை தினசரி ரோந்து பணியில் ஈடுபடவேண்டும், இந்திய கப்பற்படை தன் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்   

*தமிழ் நாட்டில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை எப்போது கிடைகிறதோ அப்பொழுது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் அதுவரையில் கடலில் காகித கப்பல் தான் விட முடியும் 

*ஏற்கனவே ஹைட்ரொ கார்பன்  நியூட்ரினோ  கெயில்  மீத்தேன்  அணு உலை என்று இந்தியா தமிழ்நாட்டை வஞ்சிப்பது போதாதென்று மீண்டும் இந்த கொடூரங்களும் தொடர ஆரம்பித்திருக்கிறது  இந்திய அரசு நிலத்தில் வாழும்  ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி விட்டு ஆதார் அட்டையை  சர்வரோக நிவாரணியாக (உண்மையில் அதுவொரு மானிய சவக்குழி)  காட்டி ஏமாற்றி வருகிறது  இலங்கை அரசு கடற்புற மக்களை காவு வாங்குகிறது  எட்டு கோடி தமிழர்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும் இல்லையெனில் இந்தியாவும் இலங்கையும் இது போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளை  நிறுத்தப் போவது இல்லை

*நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மீனவர்கள் கடல் எல்லையை பயணிக்கும் போதே அறிந்து கொள்ள வழி வகை செய்ய வேண்டும்  இரு நாட்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்ச தீவில் மீன்பிடி உரிமையை நிலை நாட்ட வேண்டும் 

*கச்சதீவை மீட்கப்பட்ட வேண்டிய முக்கியமான ஒன்று  மத்தியில் ஆட்ச்சியில் இருப்பவர்கள் தமிழகத்தையும் தமிழர்களையும் வஞ்சிப்பதை தங்களுடைய கடமையாக நினைக்கிறார்கள்  இங்குள்ள  அரசியல்வாதிகள் பதவிக்காக பணத்துக்காக  அலைகிறார்கள்  இது மாற வேண்டும்  இதற்காக  இளைஞர்கள் ஒன்றுபட  வேண்டும்  நம்முடைய  உரிமைகளை மீட்கப்பட்ட வேண்டும் 

*பாகிஸ்தான் இந்தியரை தாக்கினால் இந்திய அரசின் பதிலடி விரைவாக உறுதியாக நடக்கும் ஆனால் தமிழன் தாக்கப்பட்டால் ஒப்புக்கு கண்டன அறிக்கை மட்டுமே மீனவர்களே 30 ஆண்டுகளாக உங்கள் மீது நடத்தப்படும் இலங்கை கடற்படையின் அராஜகம் சக தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது சகோதரா நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் நம்பிக்கையுடன் இருங்கள் விரைவில் கச்சத்தீவு மீட்கப்படும் இல்லையேல் இந்தியப்பாதுகாப்பே இலங்கையால் கேள்விக்குறி ஆகிவிடும்?!காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்சினைப்போல் தமிழகம் இலங்கை பிரச்சனை விஸ்வரூபமாகிவிடும்  மத்திய அரசு புரிந்து விரைந்து உறுதியான பதில் தாக்குதலை இலங்கைக்கு கொடுக்கவேண்டும்  கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வாகும் சாது மிரண்டா காடு கொள்ளாது 

*கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்படவேண்டும்  மீனவர்கள் உயிரை பறிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்   இது இனிமேலும் தொடரக்கூடாது

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னூட்டமாக இடுங்கள். 

- நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement