இலங்கைச் சிறையிலிருந்து 85 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவர்- மத்திய அரசு உறுதி | 85 Tamil fishermen in Lanka will be released, says Indian External affairs

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (09/03/2017)

கடைசி தொடர்பு:16:08 (09/03/2017)

இலங்கைச் சிறையிலிருந்து 85 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவர்- மத்திய அரசு உறுதி

Fishermen

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 22 வயதான மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றது. இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இலங்கை அரசு, தாங்கள் எந்த துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இலங்கைச் சிறையில் இருக்கும் 85 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவர் என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பால்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து இலங்கை விசாரணை நடத்தும் என்று உறுதி அளித்துள்ளது. இலங்கையின் விசாரணை அறிக்கைக்காக இந்திய அரசு காத்திருக்கிறது என்று கூறினார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க