'தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேசிய விருது வழங்கப்படும்..!' - ப்ரியதர்ஷன் | Films will be rated based on merit, says Priyadarshan

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (09/03/2017)

கடைசி தொடர்பு:20:58 (09/03/2017)

'தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேசிய விருது வழங்கப்படும்..!' - ப்ரியதர்ஷன்

Priyadarshan director

64-வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவின் தேர்வுக் குழுத் தலைவராக பதவியேற்றுள்ளார் மலையாள திரைப்பட இயக்குநர் ப்ரியதர்ஷன். இதையடுத்து அவர், 'தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேசிய விருது வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 'நான் மன ரீதியில் இந்தப் பொறுப்புக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் இப்போது ஒரேயொரு விஷயம் தான் இருக்கிறது. நான் பார்க்கப் போகும் படங்களில் இருக்கும் தகுதியை மட்டும் அளவிடுவதுதான் அது. இந்த ஆண்டு விருதுக்கு 86 திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் தேசிய விருத்துக்கான ஜூரி, படங்களைப் பார்க்க ஆரம்பிக்கும்.' என்று கூறியுள்ளார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை