ஆந்திராவில் மேலும் 35 தமிழர்கள் கைது!

ஆந்திரா மாநிலம், கடப்பாவை அடுத்துள்ள, பத்வெல் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாகக் கூறி நேற்று 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 35 பேர் நேற்று போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது தப்பியோடியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பத்வெல் பகுதியில் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!