வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (10/03/2017)

கடைசி தொடர்பு:19:24 (10/03/2017)

திருபாய் அம்பானிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானிக்கு 2016-ம் ஆண்டு வழங்கிய பத்ம விபூஷண் விருதை திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வர்த்தகம்  மற்றும் தொழில்துறையில் சாதனைகள் படைத்தற்காக 2016-ம் ஆண்டு மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானிக்கு மத்திய அரசு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கியது.

இதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ஶ்ரீவஸ்டவா என்பவர் முதலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் பத்ம விருதுகள் வழங்குவது மத்திய அரசின் விருப்பம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க