#Liveupdates #ElectionResults : மணிப்பூரிலும் பா.ஜ.க முன்னிலை

மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.முன்னிலை வெற்றி நிலவரம் #Electionresults  

உத்தரபிரதேசம் முன்னிலை நிலவரம் (மொத்தம் 403)

எஸ்பி+  - 62

பாஜக   - 317

பிஎஸ்பி -20

மற்றவை - 4

பஞ்சாப் முன்னணி நிலவரம் (மொத்தம் 117)

அகாலி தல் - 18

காங்கிரஸ் - 76

ஆம் ஆத்மி -23

பி.எஸ்.பி. - 0

உத்தராகண்ட் - முன்னணி நிலவரம் (மொத்தம் 70)

காங்கிரஸ் - 10

பாஜக - 58

பிஎஸ்பி - 0

உகேடி

மற்றவை - 2

மணிப்பூர் - முன்னணி நிலவரம் (மொத்தம் 60)

காங்கிரஸ் - 23

பாஜக - 27

பி.ஆர்.ஜொ - 0

என்பிஎஃப்

மற்றவை - 1

கோவா முன்னணி நிலவரம் (மொத்தம் 40)

காங்கிரஸ் -16

பாஜக - 13

ஆம் ஆத்மி - 0
எம்.ஜி.பி - 0
மற்றவை - 9

முக்கிய நிகழ்வுகள் : 

* மணிப்பூரில் தற்போது பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.

* உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் தோல்வி.

 

* மணிப்பூர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான இபோபிசிங் வெற்றி பெற்றுள்ளார். இரோம் சர்மிளா தோல்வியடைந்துள்ளார்.

Ibobi singh

 

*உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 266 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வெளியே தொண்டர்கள் மோடி மோடி என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். 

* கோவாவில் முதல்வர் லட்சுமி காந்த் தோல்வியடைந்துள்ளார்.

*மணிப்பூரில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான இபோபி சிங் முன்னிலை வகிக்கிறார்.

*லக்னோ தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவுக்கு பின்னடைவு.

*இரோம் ஷர்மிலாவுக்கு பின்னடைவு

*பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான அமரீந்தர் சிங் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை எதிர்த்து லம்பி தொகுதியிலும், பாட்டியலா தொகுதியிலும் போட்டியிட்டார்.

Amarinder singh

 

ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மூன்றடுக்கு பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை  சற்று முன் துவங்கியுள்ளது. மதியம் 1 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும். உ.பி மாநிலத்தில் உள்ள மொரதாபாத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Election updates

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!