குடும்பச் சண்டையால் வீழ்ந்தது சமாஜ்வாதி! உ.பி.யில் ஆட்சியமைக்கிறது பா.ஜனதா

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி அடைந்துள்ளது.
 

modi

இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வெளியே தொண்டர்கள் ’மோடி’, ’மோடி’ என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இனிப்பு வழங்கி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 79 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

தந்தை முலாயமி சிங் யாவுக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டத்தை தொடர்ந்து, கட்சியை அகிலேஷ் கைப்பற்றியது. இவர்களின் குடும்ப சண்டையால் தற்போது ஆட்சியை இழந்துள்ளது சமாஜ்வாதி கட்சி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!