'மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்...!'- அகிலேஷ் யாதவ் | I accept the verdict of people, says Akilesh Yadav

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (11/03/2017)

கடைசி தொடர்பு:19:05 (11/03/2017)

'மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்...!'- அகிலேஷ் யாதவ்

Akilesh yadav

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியமைக்க உள்ளது. முன்னர், தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, 'உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. எந்த பட்டனைத் தட்டினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழும்படி இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.' என்று குற்றம் சாட்டி இருந்தார். 

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர், 'மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் முறைகேடு உள்ளதாக புகார்கள் எழுப்பப்பட்டால், அரசாங்கம் அது குறித்து விசாரணை நடந்த வேண்டும். இது குறித்து, நான் என்ன செய்ய முடியும் என்பதையும் பார்ப்பேன். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணி தொடரும். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்து, 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியமைக்க அதிகாரம் அளித்த உத்தரப் பிரதேச மக்களுக்கு நன்றி. உத்தரப் பிரதேச மக்களுக்கு நாங்கள் கட்டிய எக்ஸ்பிரஸ்வே பிடிக்காமல் இருந்திருக்கலாம். மக்கள், புல்லட் ரயிலை எதிர்பார்த்து ஓட்டு போட்டிருக்கலாம். நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யும் பட்சத்தில், அடுத்ததாக ஆளப்போகும் அரசாங்கம் எங்களை விட நன்றாக ஆட்சி புரியும்.' என்று கூறினார். 

செய்தியாளர்களின் சந்திப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் சமர்பித்தார். 

Akilesh yadav

நீங்க எப்படி பீல் பண்றீங்க