வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (12/03/2017)

கடைசி தொடர்பு:10:35 (12/03/2017)

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 'நோட்டா' ஓட்டுகளில் கோவாவுக்கு முதலிடம்...!

NOTA


நேற்று, ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரஸ் பஞ்சாபிலும் ஆட்சி அமைக்கின்றன. கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய இரண்டு மாநிலங்களில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கோவாவில்தான் அதிகமான நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கோவாவில் 1.2 சதவிகித ஓட்டுகள், நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 1 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 0.9 சதவிகிதம், பஞ்சாபில் 0.7 சதவிகிதம், மணிப்பூரில் 0.5 சதவிகித ஓட்டுகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க