வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (12/03/2017)

கடைசி தொடர்பு:10:41 (13/03/2017)

ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்த நிதி அமைச்சர்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், பாபாராம்தேவின் நியூட்ரோபதி மையம் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டார். பிறகு, நிகழ்ச்சி முடிந்ததும் டெல்லி செல்ல ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது, அவர் தவறி விழுந்தார். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் டெல்லி சென்றுவிட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க