வங்கிகளில் நடைபெற்ற மோசடிகளில், ஐசிஐசிஐ முதலிடம்!

2016-ம் ஆண்டு அதிகமான மோசடிப் புகார்களில் சிக்கிய வங்கிகளின் பட்டியலில், ஐசிஐசிஐ வங்கி முதல் இடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், ஐசிஐசிஐ  வங்கி 455 மோசடி வழக்கில் சிக்கியிருந்ததாம்.

ICICI bank, bank fraud
 

மோசடி செய்வதில் இரண்டாம் இடத்தை பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது. ஸ்டேட் வங்கியில் 429 மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கு 69 வங்கி அதிகாரிகள் மோசடியில் ஈடுப்பட்டதையும் ரிசர்வ் வங்கி அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.  

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியைத் தொடர்ந்து, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (224), ஹெச்டிஎஃப்சி வங்கிகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. மேலும், இந்திய பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்களில் சுமார் 450 பேர் ரூ.17,750 கோடி மதிப்பிலான மோசடிப் புகார்களில் சிக்கியிருப்பதாகவும்  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!